அறிவுத்தேடலுடன்
கஷ்டப்பட்டு சிரத்தையுடன் படித்தால் பரீட்சையில் சிறப்பான புள்ளியைப் பெற முடியும்
என்று வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.இந்து மகளிர் கல்லூரி
மாணவி பாலசுந்தரம் கெளசனா தெரிவித்தார்.
தமது பாடசாலைக்கும்
தம் ஊருக்கும் பெருமை சேர்த்த கௌசனா பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார் .
தனது ஆரம்பக்கல்வியை
வரணி ஹீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் கற்றேன் . பின் இடைநிலைக் கல்விக்காக யாழ் இந்து
மகளிர் கல்லூரியில் இணைந்தேன் . நான் இணைந்தது தொடக்கம் எங்கள் பாடசாலை ஆசிரியர்கள் என்னை ஊக்கப்படுத்தி படிப்பித்தார்கள்
. அவர்களின் ஊக்கமே என்னை சாதிக்க வைத்தது
.எனது தந்தை காலமாகிவிட்டார் .என்றாலும் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். எனது மாமா
மற்றும் உறவினர்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தனர் . ஒவ்வொரு நாளும் கற்றதை வீட்டில்
வந்து படித்துக்கொள்வேன் . தனியார் கல்வி நிலையமும் என் வெற்றிக்கு பேருதவி புரிந்தது . எல்லோருக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் .
எனது அடுத்த சந்ததியினரும்
கஷ்டப்பட்டு ஊக்கமாகப் படித்தால் வெற்றியடையலாம்.நான் விளையாட்டு
செயற்பாடுகளில் பங்குபற்றுவது குறைவு கல்வியில் மிகுந்த கவனம் எடுத்துப் படிப்பேன்
.பத்திரிகைகள் சஞ்சிகைகளைத் தேடித் தேடி வாசிப்பேன் . அது மூலம் ஓரளவு பொது அறிவு மற்றும்
பற்பல விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன் , என்றார் .




.gif)

Post a Comment