சாவகச்சேரிக்கு வந்தது புகையிரதம்;மகிழ்ச்சியில் மக்கள்!

Friday, April 25, 20140 comments

வடக்கிற்கான பரீட்சார்த்த ரயில்சேவை சாவகச்சேரி வரையில் இன்று (25.4.2013) பரீட்சித்து பார்க்கப்பட்டது.


இந்த ரயில் சேவையினை வரவேற்பதற்காக சாவகச்சேரி ரயில் நிலையத்தில் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் ரயிலை வரவேற்றனர்.

தற்போது வடக்கிற்கான ரயில் சேவை பளை வரையே நடைபெறுகின்றது.அதற்கு அப்பால் கொடிகாமம், சாவகச்சேரி ரயில் நிலையங்கள் வரை பாதை அமைக்கப்பட்டுள்ளன.

 சாவகச்சேரி  வரையான ரயில் பாதைகள் மற்றும் ரயில் தரிப்பு நிலையங்களின் வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில்,  பளை பிரதான புகையிரத நிலையத்திலிருந்து  பிற்பகல் 3.30 மணியளவில்  உத்தியோகபூர்வமாக கொடிகாமம் புகையிரத நிலையத்தின் ஊடாக சாவகச்சேரி புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.

 பல ஆண்டுகள் கடந்து வரணி மக்கள் மீண்டும் தமது பயணங்களை புகையிரதம் மூலம் மேற்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சிடனும் ,உற்சாகத்துடனும்   ரயிலை கொடிகாமத்தில்  வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972