வரணிப் பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு தேங்காய்க்களவுகள் அதிகரித்துள்ளன.தற்போது நிலவும் காலநிலையை சாதகமாக்கப் பயன்படுத்தி நண்பகல் வேளைகளில் ஆள்கள் உலவாத நேரங்களில் தென்னம் தோட்டங்களில் புகும் திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் மாசேரிப் பகுதியிலுள்ள வயலோரப் பகுதிகளிலுள்ள தென்னம் காணிகளில் புகுந்து தேங்காய் பறித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் தென்னம் தோட்டக்காரரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருடர்கள் தாம் பறித்த தேங்காய்களை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் களவாக தேங்காய் பறித்த நபர் ஒருவர் ஆள்அரவம் கேட்டு பதகளித்து மரத்திலிருந்து வீழ்ந்து இடுப்பு முறிந்த நிலையில் படுக்கையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




.gif)

Post a Comment