வரணி இயற்றாலை முன்பள்ளி மெய்வல்லுநர் போட்டி 10.4.2014 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முன்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கலைவாணி முன்பள்ளியின் முகாமைத்துவ குழு தலைவர் M.S கந்தையா தலைமையில் , மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் இறைவணக்கம், கொடியேற்றம், சிறார்களின் அணிவகுப்பு என்பன நடைபெற்றது.
சிறார்களின் அணிவகுப்பு , விநோத உடைபோட்டி ஓட்டப்போட்டி என பல போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், க.சர்வேஸ்வரன், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் சி.துரைராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.கௌரவ விருந்தினர்களாக தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் சு.பாக்கியராஜா, சாவகச்சேரி பிரதேச உதவி தவிசாளர் க.யோகராஜா, வரணி மத்திய கல்லூரி அதிபர் க.மங்களேஸ்வரன் , வரணி அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் ஐ.தேவராசா, வேள்விஷன் முகாமையாளர் றெஜினோல்ட், வரணி இயற்றாலை J/ 343 பிரிவு கிராம அலுவலர் ந.இராஜகுமாரன் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் பாராட்டும் பரிசில்களும் வழங்கப்பட்டது. நிகழ்வுகள் அனைத்தும் கொடியிறக்கலுடன் நிறைவுபெற்றது.



.gif)

Post a Comment