சுட்டிவேரத்தில் விக்கிரகம், நகைகள் திருட்டு- ;சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்!

Wednesday, October 9, 20130 comments

வரணி சுட்டிவேரம் அம்மன் ஆலயத்தில் 28.08.2013 சனிக்கிழமை இரவு மூலஸ்தான விக்கிரகங்கள் ,15பவுண் தங்க நகைகள் என்பன களவாடப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடையவர் என சந்தேசிக்கப்படும்
ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

 வரலாற்றுப்பிரசித்தி பெற்ற  இந்த அம்மன் ஆலயத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
சனிக்கிழமை இரவு ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் ஏறி ஆலயத்தின் உள்ளே திருடர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் ஆலயத்தின் கற்ப்பக் கிரகத்தின்  கதவை உடைத்து மூலஸ்தானத்துக்குள் நுழைந்துள்ளனர். 
அங்கிருந்ந மூலவிக்கிரகத்தை பெயர்த்து எடுத்ததுடன் 15பவுண்  நகையையும் சூறையாடியுள்ளனர்.இந்தச் சம்பவம் குறித்து மோப்பநாயின் உதவியுடன் பொலிசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைகளை  மேற்கொண்டனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அயற்கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.அத்துடன் நிர்வாகத்தினரையும் அழைத்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆயர்படுத்தப்பட்டு 14 நாள் விளக்கமறியலின் பெயரில் சிறைத்தண்டனை வளங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடந்த ஞாயிறு இரவு வரணி வடக்கு தம்பான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்நுளைந்து  திருடர்கள்  தாலிக்கொடி, தோடு  உள்ளிட்ட தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972