பனை உற்பத்திப் பொருட்கள் சார்ந்த பயிற்சி நிலையம் தற்போது நாவற்காட்டில் கடந்த ஒருமாதமாக செயற்ப்பட்டு வருகின்றது. இவ்வாறு வரணியிலே முதன் முறையாக பனை உற்பத்தி நிலையம் நாவற்காட்டில் தற்காலிக ஆரம்பிக்கப்பட்டு பயிற்சி உற்பத்தி நடவடிக்கைகள் மிகவும்
20130815_125522தென்மராட்சிப் பிரதேசத்தில் வரணி, மந்துவில் , மிருசுவில் , விடத்தல்பளை, எழுதுமட்டுவாழ் ,கரம்பகம் , கொடிகாமம் போன்ற இடங்களில் பனைகள் அதிகமாக உள்ளன . இந்த பிரதேசத்தில் இருந்து பனம் ஓலைச் சார்புகள் ஏராளமாக வடமராட்சிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பனம் உற்பத்தி பொருள் தயாரிக்கப்படுகின்றன.
உற்பத்தி செய்யப்படும் சுளகு நார்க்கடகங்கள் மீண்டும் கொடிகாமம் போன்ற பல பிரதேச வர்த்தக நிலையங்களுக்கு எடுத்துவரப்பட்டு விற்பனை யாகின்றன. பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் பாய்கள் , 20130815_125532ஓலைப்பெட்டிகள் மற்றும் அலங்காரக் கூடைகள் மற்றும் பனம்கரும்பட்டி , ஒடியல் ,புளுக்கொடியல், பனாட்டு போன்ற உற்பத்திகள் தென்மராட்சி பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவையின் சந்தை வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
20130815_125510இவ்வாறு பனை அபிவிருத்தி சபை தனது முதற்கட்ட பணியை வரணி நாவற்காட்டில் ஆரம்பித்துள்ளது. மேலும் பனை அபிவிருத்தி சபை இவ்பகுதி மக்களுக்கு பயிற்சிகளை வழங்கி உற்பத்தி பொருட்கள் நவீனமயப்படுத்தி தென் பகுதிக்கு விற்பனை செய்ய வழிவகைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இப்படங்கள் நாவற்க்காட்டில் பயிற்சியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது.



.gif)

Post a Comment