தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு வரணி பொது நூலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் துரைராஜா தலமையில் பரிசில் வழங்கல் வைபவம் இடம்பெற்றது.
இந்ந நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண சபை உறுப்பினர் சுகிர்தன் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களாக யோகராசா(உபதலைவர் சாவகச்சேரி பிரதேச சபை) , மங்களேஸ்வரன் (அதிபர் வரணி ) ,தர்சினி(செயலாளர் சாவகச்சேரி பிரதேச சபை),செல்வராணி (சனசமூக அபிவிருத்தி உத்தியோகதர்) ஆகியோர் கலந்து கொண்டனர் . மேலும் கொளரவ விருந்தினர்களாக இராஜரட்ணம் ,வசந்தரூபன் ,கோடீஸ்வரன் , தேவகுமார் ,வேல்முருகு ஆகியயோரும் கலந்துகொண்டனர் .
விருந்தினர்களால் வரணியில் இம்முறை தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது! .தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் வைபவம் நிறைவுபெற்று கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது இதில் வரணியின் சைவப்புலவர் கமலநாதன் -(எழுத்தாளர்)அவர்கள் மற்றும் அன்றையதினம் இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் 5 நடன நிகழ்வுகளை வளங்கியமைக்காக நடன ஆசிரியர் ஸ்ரீ கமலேஸ்வரி மற்றும் வருடாந்தம் புத்தகங்களை அன்பளிப்பாக வளங்கி வரும் பூபாலசிங்கம் புத்தகசாலை இயக்கனர் மகாலிங்கம் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
இவ்வாறு நிகழ்வில் நூலக அபிவிருத்தி சபை நிர்வாக உறுப்பினர் சி.கணபதிப்பிள்ளை அவர்கள் நூலக வாசகர்களின் நன்மைகருதி LCD 24" தொலைக்காட்சி யொன்றை நன்கொடையாக வளங்கியிருப்பமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








.gif)

Post a Comment