வரணி மகா வித்தியாலயத்தில் புதிய ஈருளி தரிப்பு நிலையத்தை வரணி இயற்றாலையை சேர்ந்த சின்னர் ஆறுமுகம் அவர்களின் பாரியாரால் இன்று 18.11.2013 காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது . இவ் நிலையம்அமரர் சின்னர் ஆறுமுகம் அவர்களின் நினைவு ஞாபகார்த்தமாக இவரின் பிள்ளைகளால் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி ரூ 550 000 பெறுமதியில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .
இவ் நிகழ்வு பாடசாலை முதல்வர் க.மங்களேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது .பிரதம விருந்தினராக கு.சிவானந்தம் (கோட்ட கல்விப் பணிப்பாளர்) கலந்து கொண்டதுடன் ,கௌரவ விருந்தினர்களாக இராசகுமார் (கிராமசேவையாளர்),முதலிக்குட்டி (முன்னாள் பாடசாலை அபிவித்திச்சங்க பொருளாளர்) ,நவரட்ணசாமி ஆசிரியர் ,சுந்தரமூர்த்தி ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
அமரர் சின்னர் ஆறுமுகம் அவர்களின் நினைவு உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டு அவரின் பாரியாரல் புதிய ஈருளி தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது . நிகழ்வில் பெருமளவிலான பெற்றோர்கள் ,மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர் .
1954 ஆண்டு உருவாக்கப்பட்ட இவ் பாடசாலைக்கு போதிய வசதி கொண்ட ஈருளி தரிப்பு நிலையம் கடந்த காலங்களில் காணப்படவில்லை ஆதலால் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர் .இவ்வாறு இருக்கையில் 2004 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரம் படித்த மாணவர்களால் ஓர் ஈருளி தரிப்பு நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு அதுவும் 2010 ஆம் ஆண்டளவில் நிலைகுலைந்தது ... இவ்வாறு மாணவர்களின் பிரச்சினை அமரர் ஒருவரால் 2013 ஆம் ஆண்டு 59 வருடங்களுக்கு பின்பு தீர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நிகழ்வின் இறுதியில் பாடசாலை மாவர்களால் குழு நடனம் ஒன்று வளங்கப்பட்டது.












.gif)

Post a Comment