கலைவாணி முன்பள்ளி வரவேற்பு விழா!-வரணி இயற்றாலை (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

Saturday, December 7, 20130 comments

வரணி இயற்றாலையில் அமைந்துள்ள கலைவாணி முன்பள்ளியில் நேற்றைய தினம் சனிக்கிழமை முன்பள்ளி ஆசிரியர் கே. விஜயா தலைமையில் ,முன்பள்ளியில் இருந்து விடைபெற்று பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் வரணி இயற்றாலை கிராம சேவையாளர் இராசகுமார் மற்றும்  முன்பள்ளி அபிவிருத்தி தலைவர் கந்தையா  ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டர் .
  நிகழ்வில் முன்பள்ளியின் சிறார்கள்  இம் முறை முன்பள்ளியில்  இருந்து விடைபெறும்  9 சிறார்களை  மாலை அணிவித்து கொளரவித்து வரவேற்றனர் .
மேலும் சிறார்களுக்கு போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் வெற்றி பெற்ற மாவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972