வரணிப்பிரதேசத்தில் உதவிப்பணம் பெறுவோரின் விபரம் மீளாய்வு!

Thursday, January 16, 20140 comments

தென்மராட்சி பிரதேச செயலக சமூகசேவைகள் பிரிவினர் பிரதேசத்தில் பொதுசன மாதாந்த உதவிப்பணம் பெறுவோருக்கான மீளாய்வை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளனர்.
கிராம அலுவலகர் பிரிவுரீதியாக பிரதேச  உத்தியோகத்தர்களால் மீளாய்வு நடத்தப்படவுள்ளதால் பொதுசன மாதாந்த உதவிப்பணம் பெறுவோர் தமது தேசியஅடையாளஅட்டை,குடும்பஅட்டை ,உதவிப்பணம்பெறும் அட்டை ஆகியவற்றுடன் நேரில் சமூகமளிக்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக வரணிப்பிரதேசத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் பின்வரும் கிராம அலுவலகர் அலுவலகங்களில் மீளாய்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


27ஆம் திகதி வரணி வடக்கு ,28 ஆம் திகதி மாசேரி , 30 ஆம் திகதி இடைக்குறிச்சி ,31 ஆம் திகதி கரம்பைக்குறிச்சி , ஏனைய கிராம அலுவலகங்கள் தொடர்பான தகவல்கள் என்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972