வரணி இயற்றாலை பிரதேசத்தில் மக்கள் தமது பாதுகாப்பை உறுப்படுத்துவதற்க்கான சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் இன்று இயற்றாலை கலைவாணி சனசமூக நிலையத்தில் மாலை 5 மணியளவில் இயற்றாலை சிவில் பாதுகாப்புக்குழுத்தலைவர் மற்றும் விவசாய சம்மீளனனத்தின் தலைவருமாகிய த.சின்னத்தம்பி தலைமையில் இடம்பெற்றது .
இவ் நிகழ்வில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உயர் அதிகாரி ஹிந்துருசிங்க மற்றும் பொலிஸ் அதிகாரிகளான ரணவீர ,அனோஜன் மற்றும் இயற்றாலை கிராமசேவையாளர் இராசகுமார் ,கொடிகாமம் பிரதேச சபையின் உபதலைவர் யோகராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கொடிகாமம் பொலிஸ் உயர் அதிகாரி ஹிந்துருசிங்க அவர்கள் உரையாற்றுகையில் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் இயற்றாலையில் மட்டுமே கடத்தல் ,கசிப்பு ,வழிப்பறி , போன்ற குற்றச்செயல்கள் இடம்பெறுவது குறைவென்றும் தொடர்ந்தும் இப் பிரதேசத்தில் இவ் நிலமை நீடிக்க வேண்டும் என்றும் குற்றச் செயல்கள் கொடிகாமத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரதேசத்தின் பாதுகாப்பினை அமைப்பதற்கு பிரதேசத்தில் உள்ளவர்களின் ஒத்துளைப்பும் பொலிஸாருக்கு தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இயற்றாலைக்கு 25 பேர் கொண்ட சிவில்பாதுகாப்புக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாவும் அதற்க்கான வேலைகளை இன்றே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் .
தொடர்ந்தும் கொடிகாமம் பிரதேசத்திற்கு பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு தற்போது றயில் கடவை ஊழியர் ,காவற்துறை ,பெயின்ரர் ,பிளம்பர் போன்ற வெற்றிடங்கள் இருப்பதாகவும் இவற்றில் கடமை ஆற்ற விரும்புவோர் தமது சுயவிபரப்படிவத்தை தமக்கு ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டார் . மேலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை தொடர்பு கொள்ளக்கூடிய தொடர்பிலக்கம் என்பவற்றை வழங்கி இளைஞர்கள் தம் தொர்பான பிரச்சினைகளை பொலிசாருடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதனையும் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

.jpg)








.gif)

Post a Comment