விசமிகளால் பற்றைகளுக்கு
வைக்கப்பட்ட தீ பற்றிப்படர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பனைகள் மற்றும் 1000க்கும்
மேற்பட்ட வடலிகள் எரிந்து ஓலைகள் கருகி நாசமாகியுள்ள சம்பவம் வரணி வடக்கு சைவக்குடியிருப்பு
பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் பக்கத்தில்
உள்ள இரண்டு குடும்பத்தவர்களின் வீட்டு வேலிகளும்கூடத்தீப்பற்றி எரிந்து எல்லைகளில்
இருந்த பூவரச மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
சட்டவிரோதமாக விறகு
தறிப்பவர்களே இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் எனக் காணி உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தபகுதியில்
வசித்துவந்த குடும்பங்களை சோ்ந்தவர்கள் இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வசித்து வரும்
நிலையில் தற்போது இந்தப்பகுதி சன நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளது.
இதனைச் சாதமாக
பயன்படுத்தி விறகு சேகரிப்பவர்கள் இந்த நாசகார வேலையில் ஈடுபட்டிருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை இந்தப்பகுதியில் சட்டவிரோதமாக பனைமரங்களைத் தொகையாகத் கறித்து சென்றவர்கள்
கடந்த சிலமாதங்களில் கொடிகாமம் பொலிஸாரால் வாகனங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

.jpg)



.gif)

Post a Comment