வரணி
குடத்தனை பிரதான வீதியில அமைந்துள்ள பாலம் இதுவரை
புனரமைக்கப்படாத நிலையில் உள்ள பாலம்
அமைந்துள்ள பகுதி மற்றும் பாலத்துக்கு அருகில் பழுதடைந்த நிலையில் பெரும் பள்ளமாக மாறியுள்ள
பாதைப்பகுதி என்பனவற்றைப் புனரமைத்து தருமாறு
மாசேரி சனசமூகநிலைய நிர்வாகம் மனு ஒன்றின் மூலம் வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள
பணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த மனுவில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது --- குறித்தபாலத்தில் அந்தக்காலகட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த வெள்ள நீர் பாயும் சீமெந்து குழாய்கள் சவர் நிலத்தில் புதைந்துள்ளமை காரணமாக
அந்தக் குழாய்கள் ஊடாக மாரிகாலங்களில் வெள்ளம் பாயமுடியாத நிலை உள்ளதுடன் இதன் காரணமாக
வெள்ளநீர் பாலத்துக்கு மேலாகவும் பாயும் நிலை வருடந்தோறும் தொடர் கதையாகவே உள்ளது.
அதேவேளை
வெள்ளம் பாலத்துக்கு அருகில் தாழ்ந்த நிலையிலுள்ள பிரதான பாதைக்கு மேலாகவும் பாய்ந்து
அந்தப்பகுதி தற்போது வெள்ளம் பாய்ந்தோடும் வாய்க்காலாக மாறி உள்ளது. இதனால் மாரிகாலத்தில்
இந்தப்பாதையூடாக போக்குவரத்து தடைப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. குறித்த பாதை
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கும், தென்மராட்சி கிழக்கு பிரதேசத்திற்கும் இணைப்பு
வீதியாகவும் அதேவேளை ஏராளமான மக்கள் நாளாந்தம் பயணிக்கும் பிரதான பாதையாகவும் விளங்குகின்றது.
தற்போது குறித்த பாதை பற்றைகள் வளர்ந்து எதிர்காலத்தில் முழுமையாகப் பாதையை மூடிவிடும்
அளவுக்கு வளர்ந்துள்ளதுடன் பயணிப்போருக்கு இடையூறாகவும் உள்ளன.
எனவே
மேற்குறித்த பாலப்பகுதி புனரமைத்து உயர்த்தப்படல் வேண்டும். அதேசமயம் வெள்ளம் பாயும்
வாய்க்காலாக மாறியுள்ள பகுதியில் புதிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு அந்தப்பிரதேசப் பாதை
உயர்த்தப்பட்டு புனரமைக்கப்பட வேண்டும். குறித்த பாதையின் இரு பகுதியிலும் வளர்ந்துள்ள
பற்றைகள் வெட்டி சீராக்கப்பட வேண்டும்.என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.




.gif)

Post a Comment