வடமராட்சி, குடத்தனை , அம்பன் பிரதேசத்தின் தெற்குப் பகுதிக்கும், வரணி வடக்கு பிரதேசத்துக்கும் இடையில் அமைந்துள்ள இயற்கை வளம் பொருந்திய கண்டல்காடு தற்போது விறகு வெட்டவரும் விறகு சேகரிப்போரால் தீ வைத்துக் கொளுத்தப்படும் சம்பவம் நாளாந்தம் இடம்பெறுகின்றது.
தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக நீர்வளம் வற்றியுள்ள குறித்து பிரதேசம் விறகுத் தேவைக்காக அழிக்கப்பட்டு வருகின்றது.- “ நாளாந்தம் ” மாட்டு வண்டில்களில் வரும் நபர்கள் வியாபார நோக்கம் கருதி மரங்களை வெட்டிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
குறித்த பிரதேச இயற்கை வளம் வெளிநாட்டு , உள்நாட்டு பறவைகளின் சரணாலயமாக உள்ளது.
அதேசமயம் பல்லின மீனினங்களின் வாழ்விடமாகவும் , உற்பத்தியிடமாகவும் இந்தப் பிரதேச சதுப்பு நிலம் இருந்து வந்த நிலையில் கோடை காரணமாக சதுப்பு நிலங்கள் நீர்வற்றிய நிலையில் மீன் பிடிப்போர் நாளாந்தம் மீன்களை எதுவித சிரமமுமின்றி பிடித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
குறித்த இயற்கை வள கண்டல் காடு அழிக்கப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுத்துச் செயற்பட வேண்டும் என்று சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் பலவும் அகற்றப்பட்டுள்ள நிலையில் “சட்டவிரோத விறகு வெட்டும் ” நடவடிக்கைகள் சுதந்திரமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

.gif)

Post a Comment