கலைவாணி விளையாட்டுக் கழகத்திற்கு சிகரத்தால் விளையாட்டு உபகரணங்கள்!

Tuesday, May 6, 20140 comments

வரணி இயற்றாலை கிராமத்தின் கலைவாணி சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்திற்கு சிகரம் நிறுவனத்தால் ஒரு தொகுதி விளையாட்டு உபரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.


இயற்றாலை கிராமத்து இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் மேற்படி சனசமூக நிலைய விளையாட்டு கழகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே உள்ளக மற்றும் வெளியக விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், கல்வி – தொழில் வழிகாட்டி விபரக்கொத்து மற்றும் பத்திரிகைகள் என்பனவும் சனசமூக நிலையத்திற்கு வழங்கப்பட்டன.
மேற்படி அன்பளிப்புக்களை சிகரம் நிறுவனத்தின் பிரதேச இணைப்பாளர் KK.நிதர்சன் வழங்கி வைத்தார்.
இதேவேளை, பிரதேச ரீதியாக இளைஞர், யுவதிகளின் கல்வி – தொழில் – விளையாட்டு முன்னேற்றங்களுக்காக சிகரம் நிறுவனம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், முன்னரும் தாவளை இயற்றாலை , வரணி வடக்கு ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை  சிகரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972