பெண் முயற்சியாளருக்கான பயிற்சிநெறி மே 5 முதல்..!!!

Monday, April 28, 20140 comments

தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பிக்க விருப்பமுள்ள பெண் முயற்சியாளரின் தொழில் முயற்சியாண்மைத் திறனை விருத்தி செய்வதற்கும் ,  தெரிவு செய்த தொழிலை சிறந்த முறையில் கொண்டு நடத்துவதற்கான முகாமைத்துவத் திறனை விருத்தி செய்வதற்குமான  பயிற்சிநெறி நடைபெறவுள்ளது.



 யாழ். மாவட்ட இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மே 5 ஆம் திகதி தொடக்கம் 9 ஆம் திகதி வரை யாழ்.பொது நூலக  கேட்போர் கூடத்தில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


இதில் பெண் தலைமைத்துவமுடையோர், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர் மற்றும் இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட, தொழில் முயற்சியை ஆரம்பிக்க விருப்பமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே மேற்குறித்த பயிற்சி நெறியில் கலந்து கொள்ள விரும்பும் பெண் தொழில் முயற்சியாளர்கள் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய வீடமைப்பு , அபிவிருத்தி அதிகார சபைக்  கட்டடம், சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரணியிலிருக்கும் சம்பந்தப்பட்ட பெண்களும் இதில் பங்குபற்றி உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972