ஆலமரத்தில் குழை வெட்டியவர் தவறி விழுந்து காயம்!

Friday, September 18, 20150 comments

வளர்ப்பு ஆடு ஒன்றுக்கு உணவுக்காக குழை வெட்ட ஆலமரம் ஒன்றில் ஏறிய ஒருவர் தவறி வீழ்ந்து நாரிப்பகுதி பாதிப்படைந்த நிலையில் யாழ் .- போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார்.இந்தச் சம்பவம் வரணி இடக்குறிச்சிப்பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

இவ் பிரதேசத்தை சேர்ந்த க.ஜயாத்துரை (70) என்பவரே காயமடைந்தவராவார்.
குறித்த நபர் தனது வளர்ப்பு ஆட்டுக்கு உணவுக்காக குழைவெட்ட மக்கள் நடமாட்டம் இல்லாத தற்சமயம் பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்ட பகுதிக்குச்  சென்றுள்ளார். இவர் மரத்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் விழுந்த இடத்திலே எழும்ப முடியாத நிலையிலே கிடந்துள்ளார்.

இந்த இடத்துக்கு அண்மையில் இளைஞர்கள் மாலை வேளையில் கிரிக்கட் விளையாடுவது வழக்கம். இளைஞர் ஒருவர் அடித்த பந்து தூர விழந்ததை அடுத்து அவர் பந்தை தேடிச் சென்ற சமயம் குறித்த  நபர் முனகிய நிலையில் மரத்தில் இருந்து வீழ்ந்து கிடப்பதை கண்ணுற்றார். உடனடியாக அந்த இளைஞரை தமது சக இளைஞர்களை உதவிக்கு அழைத்து குறித்த நபரை தூக்கிக்கொண்டு பிரதான வீதிக்குக் கொண்டு சென்று வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர் எனக்கூறப்பட்டது.




நன்றி 
-யன்-

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972