மாசேரி - குடத்தனை வீதியில் ஒளிராத மின்விளக்குகள்!

Friday, September 11, 20150 comments

சாவகச்சேரி பிரதேச சபையால் கடந்த மாதம் முற்பகுதியில் வரணிப்பிரதேசத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தநிலையில் மாசேரி - குடத்தனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட 3 வீதி விளக்குகள் பொருத்தப்பட்ட நாளில் இருந்து ஒளிரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச சபைக்கு  தெரியப்படுத்தப்பட்டது என்றும், எனினும் ஒரு மாத காலமாகியும்  அவை சீர்செய்யப்படவில்லை  என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972