கொடிகாமம் - பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பொதுக்கூட்டம்

Friday, September 11, 20150 comments

கொடிகாமம் - தென்மராட்சி கிழக்கு  பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய பொதுக்கூட்டமும் புதிய இயக்குனர் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணிக்கு தலைமைச்சங்கத்தின் மேல்மாடியில் இடம்பெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் செ.அமரசேகரம் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் கூட்டறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சு.கனேசு கலந்து கொள்ளவுள்ளார். அன்றைய தினம் புதிய இயக்குனர் சபைக்கு 7 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். இவர்களில் 2 பேர் 18, 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார். இந்தக்கூட்டம் தொடர்பான அறிவித்தல்கள் சங்க செயலாளரினால்  பொதுச்சவை அங்கத்தவர்களுக்கு  தபாலில் தற்சமயம் அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972