கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை பேருந்து சேவையானது இரவு 8 .00 மணியடன் நிறைவடைகின்றது.
இரவு 8.00 மணியின் பின்னர் வெளிமாவட்டங்களில் இருந்து கொடிகாமம் வருவோர் பல்வேறு சிரமங்களை நோக்குவதனைக் காணமுடிகின்றது .
பெண்கள், சிறுவர்கள்,முதியவர்கள்,எனப் பல்வேறு தரப்பினரும் இரவு8.00 மணியின் பின்னர் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்கள் ஆட்டோவினையே பயன்ப்படுத்துகின்றனர்.
வசதி படைத்தவர்கள் ஆட்டோவினை வாடகைக்கு அமர்த்தி செல்வதினையும் , வசதி இல்லாதவர்கள் உறவினர் வீடுகளில் நின்று மறுநாள் காலையிலயே பயணத்தை தொடர்வதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
6எனவே இலங்கை பொக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினர் இரவு9.00 மணிக்கு சேவையினை கொடிகாமத்தில் இருந்து நடத்தினால் பொதுமக்கள் பெரிதும் நன்மை அடைவார்கள் எனப் பயணிகள் கூறுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு 9.00 மணிக்கு இறுதி பஸ் சேவையை நடத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




.gif)

Post a Comment