வரணிப் பகுதியில் குரங்குகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொல்லைகளை நீக்க நடவடிக்கையை எடுக்குமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்குக் கூட்டங்கள் இந்தப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் உள்ள காய்கறி வகைகளையும் முருங்கைகள்,மாமரங்களில்
காய்க்கும் மாங்காய்கள் என பல பலவிதமான உணவுப்பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
ஆள்கள் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை எடுத்து உண்ணும் நிலையும் காணப்படுகிறது.
வடமாகண விவசாயத் திணைக்களம் குரங்கு இனங்களை விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரணிப் பிரசேத்திலும் குரங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கோரியுள்ளனர். இவ்வாறு வரணியின் சில இடங்களுக்கு இது தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் .




.gif)

Post a Comment