வரணி -வடக்கு எல்லை உவர் நீர் தடுப்பணையை புனரமைக்க கோரிக்கை!

Thursday, October 10, 20130 comments

வரணிபிரதேசத்தின் வடக்கு எல்லைப்பிரதேசத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட உவர் நீர் தடுப்பணை மீள புனரமைக்கப்பட வேண்டும் விவசாயிகள் தரப்பில் கோரப்படுகிறது.இவ் அணை வரணி வடக்கு ,மாசேரி ,இடைக்குறிச்சி போன்ற கிராமங்களின் வடக்கு எல்லையாகவுள்ள கண்டல்
காட்டுப்பகுதிக்கும் , வயல் பிரதேசங்களுக்கும் இடையில் உவர் நீர் உட்புகாதவாறு தடுக்கும் வகையில் கட்டப்பட்டது.

வருடம் தோறும் இந்தக் காட்டுப்பகுதியில் தேங்கி நிற்கும் உவர் நீர் இந்த 20130602_125629அணையூடாக குறித்த வயல் நிலங்களுக்கும் பாய்வதால் அணைக்கு அருகில் உள்ள பல ஏக்கர் கணக்கான வயல் நிலங்கள் சவர் நிலமாக மாறியுள்ளன. இந்த நிலையில் குறித்த வயல்களில்  நெற்செய்கையை  மேற்க்கொள்ள முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

     எனவே குறித்த சேதமடைந்த நிலையிலுள்ள வெள்ளத்தடுப்பு அணைக்கட்டை புனரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அரச திணைக்களம் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் என விவசாயிகள் தரப்பால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972