வரணி –பொது நுலகத்திற்கு நவீன வசதிகள் கொண்ட சிறுவர் பகுதி அமைக்கும் பணி தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் நூலக அபிவிருத்திக் குழுவின் செயளாளர் பொ.ரவீந்திரன் தலைமையில் நூலவளாகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் போது( your friend foundation) யுவர் பிறண்ட் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திரு k.செவ்வேல் ,வரணி உப அலுவலக பொறுப்பதிகாரி கே. பாலகிருஸ்ணன், சாவகச்சேரி பிரதேச சபை செயளாளர் சி .தர்சினி , நூல உதவியாளர் வ. நாகேஸ்வரி , நூலக அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்களும் ,நூலக வாசகர்கள் போன்றோர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர் .
வரணி பொது நூலகத்தில் சிறுவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதி இதுவரை காலமும் நவீன வசதிகள் எதுவும் இன்றி, புத்தகங்கள் பற்றாக்குறையால் முழுமை பெறாமல் இருந்து வந்ததைத் தொடர்ந்து நூலக அபிவிருத்திக் குழுவின் பாரிய முயற்சியால் இவ் கலந்துலையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு சிறுவர் பகுதியில் காணப்படும் குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது .இதில் திரு செவ்வேல் அவர்கள் நவீன வசதிகள் கொண்ட இவ் சிறுவர் பகுதியை தாம் அமைத்து தருவதாகவும், இதற்க்கான கட்டிடம் அமைக்கும் பணிகளை அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் என்று நிகழ்வில் உறுதியளித்தார்.
இவ்வாறு சிறுவர் பகுதிக்கு தேவையான 30,000 பெறுமதியான தளபாடங்களையும் , 50,000 பெறுமதியான புத்தகங்களையும் வரணியூர் நலன் விரும்பியான தொழிலதிபர் திரு v. செல்லையா அவர்கள் ஏற்கணவே வளங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்




.gif)

Post a Comment