வரணிப் பொது நூலகத்திற்கு சிறந்த சேவைக்கான விருது!

Thursday, October 17, 20130 comments

வரணி பாடசாலைக்கு அருகாமையில்க் காணப்படும் வரணி பொது நூலகம்  சிறந்த சேவைகளை வாசகர்களுக்கு வழங்கியமைக்காக விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    இவ்வாறு   சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான சரசாலை,கைதடி,நாவற்குழி, மிருசுவில் ,வரணி ஆகிய ஜந்து நூலகங்களே இவ் சிறந்த தெரிவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது .

 விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு, தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய   நூலக ஆவணவாக்கல் சபையினர் சிறப்பாக  செயற்படும் நூலகங்களுக்கு வருடாந்தம் தேசிய சேமிப்பு மாத காலத்தில் விருதுகள் வழங்கிக் கௌரவிப்பது குறிப்பிடத்தக்கது.



Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972