வரணிப் பிரதேசத்தில் டெங்கு நோய் ஒழிப்புத்திட்டம் கடந்த சனிக்கிமை முழுமையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரி சோதகர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் குழுக்களாகப் பிரிந்து வீடு வீடாகச் சென்று சுற்றாடல்களை பரிசோதித்ததுடன் டெங்கு நோய் தொடர்பான பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
குறித்த பிரதேச கிராம அலுவலகர்கள் ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,சாவகச்சேரி பிரதேச பணிமனையின் வரணி உப அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
Home
வரணிச்செய்திகள்
வரணியில் டெங்கு ஒழிப்புச் செயற்பாடு!

.jpg)


.gif)

Post a Comment