வரணி மகா வித்தியாலயத்தின் பாடசாலை கீதம்!

Tuesday, October 22, 20130 comments

உதய சூரியன் நாமே -நம் வாழ்வினிலே
இதய பாடசாலை நிறைந்த அறிவு தரும்





உதய சூரியன் நாமே -நம் வாழ்வினிலே
இதய பாடசாலை நிறைந்த அறிவு தரும்

ஞானத்திலே உளர் அறிவினிலே-புகழ் 
சீலத்திலே வாழ்வு சிறுவர் களித்திடுவோம்

உதய சூரியன் நாமே -நம் வாழ்வினிலே
இதய பாடசாலை நிறைந்த அறிவு தரும் 


பாடலிலே கலை தேடலிலே மேடை 
ஆடலிலே நன்மை நாடலிலே உண்மை 
ஓடலிலே மலை இயலினிலே தீமை 
சாடலிலே ஓர் பாடசாலை இதாம் என்னும்

கல்வியினிற் பெரும் காதலுற்றுள்ளவர்
நெல்விளைக்கின்ற பேர் நிலத்தினில் வாழுநற் 
செல்வமதாய் மிகச் சீர் பெரும் கழகமாய் 
நல்வினை பல செய்யும் நம் பாடசாலை


தரணியில்  வளர்பிறை தானென வளர்வது 
வரணி அரசினர் வளர் கலா சாலையே
உறவு கொள் மனத்துடன் உத்தமராய் நின்று 
பரவுகின்றோம் எங்கள் பண்பு கொள் தாயே

உதய சூரியன் நாமே -நம் வாழ்வினிலே
இதய பாடசாலை நிறைந்த அறிவு தரும் 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972