வரணி கரம்பைக் குறிச்சி திக்கில் குளத்திற்கு அருகாமையில் இருக்கும் வாய்க்காலை புனரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை!

Sunday, January 5, 20140 comments

வரணி கரம்பைக் குறிச்சி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திக்கில் குளத்திற்கு அருகாமையில் இருக்கும் வாய்க்காலை
புனரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் தென்மராட்சி பிரதேச செயலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வாய்க்கால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால் அப்பகுதி மக்களின் விளைச்சல் நிலங்களும் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள்  தெரிவித்துள்ளனர்,
இதுகுறித்து கிராம அலுவலர் விவசாயப் பணிப்பாளருக்கு பரிந்துரை செய்து , இவ்வாய்க்காலை கூடிய விரைவில் புனரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரணிப்பகுதியில் இவ்வாறு பல வாய்க்கால்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையினால் போக்குவரத்து பிரச்சினை மற்றும்  மலேரியா போன்ற‌ தொற்று நோய்களும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது, எனினும் மக்கள் இதுபற்றி உரிய அதிகாரிகளிடம் முறையிடுவது குறைவு என்று இணையம் ஒன்று தமது செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972