பொலிஸ் சோதனைச் சாவடி வரணிச்சந்தியில் வேண்டும் ;அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை !

Wednesday, January 8, 20140 comments

வரணிச் சந்தியில் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்குமாறு அந்தப்பகுதி பொதுமக்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பத்துக்கு மேற்பட்ட கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வரணிப்பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மணல் அகழ்வு ,திருட்டு ,வீதிகளில் நிற்போரின் அட்டகாசம் ,தாக்குதல் போன்றவை தொடராக இடம்பெற்றுவருகின்றன.

பொலிஸாரின் ரோந்து வாகனம் செல்லும் வரை காத்திருந்துவிட்டு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடைக்குறிச்சி பிரிவில் உள்ள முன்பள்ளி மற்றும் பொகுநோக்கு மண்டபம் ஆகியவற்றின் கதவுகள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளன.இரவு வேளைகளில் மதுபோதையில் மோட்டார்சைக்கிள்களிலும் நடந்தும் செல்வோரின் அட்டகாசங்கள் பெரிதும் அதிகரித்து வருகின்றன.

இவற்றைக்கருத்தில் கொண்டு கொடிகாமம் -பருத்தித்துறை வீதி ,மந்தவில் ,வேம்பிராய் , குடமியன் ,ஆகியவீதிகள் சந்திக்கும் எட்டாம் கட்டைச்சந்தியில் நிரந்தர பொலிஸ் சோதனை சாவடியொன்றை  அமைத்து பிரதேச மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972