தென்மராட்சிப் பகுதியில் குரங்குகளினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) யுடன் இணைந்து விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (21.04.2014) அன்றைய தினம் யாழ.செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயத்திணைக்களத்தினரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவசாயிகளுக்கு இடையூறு விளைவிக்கும் குரங்குகளை வனபரிபாலனத்திணைக்களத்துடன் இணைந்து பிடித்து அவற்றைக் காடுகளில் கொண்டுசென்று விடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரணிப்பகுதியிலும் குரங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




.gif)

Post a Comment