பட்டியிலிருந்து மாயமான பசு திரும்பியது வால் முறிந்த நிலையில்..!!

Sunday, April 27, 20140 comments

மாட்டுப்பட்டியிலிருந்து திருடப்பட்ட பசுமாடு ஒன்று மறுநாள் அதன் வால் முறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பட்டிக்கு திரும்பி வந்த சம்பவம் வரணி இடைக்குறிச்சி பிரதேசத்தில் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மாட்டு உரிமையாளர் தெரிவித்ததாவது : கடந்த சில தினங்களாக தென்னம்காணி ஒன்றில் மாடுகளை பசளைக்காக கட்டி வந்தேன்.நாளாந்தம் காலையில் பட்டிக்குச் சென்று பார்வையிடுவேன்.கடந்த வாரத்தில் ஒருநாள் பசுமாடு ஒன்று காணாமற்போய் இருப்பது தெரியவந்தது. எல்லைவேலி முட்கம்பிகளும் வெட்டப்பட்டிருந்ததால் அந்தப் பசுமாட்டை எவரோ திருடிக்கொண்டு சென்றிருக்கலாம் என்று ஊகித்தேன். அந்தப் பசுமாட்டை பல இடங்களிலும் தேடி அலைந்தும் மாட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்தநாள் அந்த பசுமாடு கழுத்தில் புதிய கயிற்றுடன் வால்பகுதி முறிக்கப்பட்ட நிலையில் திரும்பி வந்தது. என்றார்.

பசுமாட்டைத் திருடிச் சென்றவர்களுக்கு ஒத்துழைக்காமல் பசு வீழ்ந்து படுத்திருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் தமது முயற்சியை கைவிட்டு சென்றிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக வரணிப் பிரதேசத்தில் கால்நடைகள் திருட்டுச் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972