வரணி மருத்துவ மனையில் வயோதிப நோயாளருக்கு முன்னுரிமை

Sunday, April 20, 20140 comments

வரணி பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சை பெறவரும் 65 வயதிற்கு மேற்பட்ட நோயாளருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் தனியாக அமர்ந்திருக்க இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட 101 நாள் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த மருத்துவமனையில் தற்போது ஏராளமான நோயாளர்கள் சிகிச்சைக்கு நாளாந்தம் வருகை தருகின்றனர். இந்த நிலையில் குறித்த வயது வந்தோர் தமக்கு இத்தகைய உதவியை ஏற்படுத்தி தந்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

குறித்த மருத்துவமனை தற்போது 24 மணி நேரமும் இயங்கி வருவதுடன் மீள் நியமனம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரே இங்கு முழுநேர சேவையில் இருந்து வருகிறார்.

கடமை புரிந்த மருந்தாளரும் இடம்மாற்றம் பெற்று சென்று ஒருமாதம் கடந்து நிலையிலும் , பதிவீட்டு மருந்தாளர் இதுவரை கடமைக்கு சமூகமளிக்கவில்லை.இது தொடர்பில் தாம் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தி உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. varany2day - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972